மேலும் செய்திகள்
தொழில்நுட்ப பல்கலை.,யில் எய்ட்ஸ் விழிப்புணர்வு
21-Feb-2025
புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், ரெட் ரிப்பன் கிளப், கல்லுாரி சட்ட ஆலோசனை மையம் சார்பில் விளிம்பு நிலை மக்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் சந்திரா வரவேற்றார். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் பங்கேற்று, ஆதிதிராவிடர் மாணவர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்து விளக்கம் அளித்தார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட மேலாளர் ஜெகதீசன், பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளும், பிரச்னைகள் குறித்து பேசினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.
21-Feb-2025