விழிப்புணர்வு பேரணி
புதுச்சேரி: வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், டெங்கு விழிப்புணர்வு பேரணி சாமியார் தோப்பு பகுதியில் நடந்தது.மருத்துவ அதிகாரி பாமகள்கவிதை தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். வாஞ்சிநாதன், பரசுராமன், முருகன், விஜயன், தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் மதிவதனன், உதவி ஆய்வாளர்கள் அய்யனார், மரிய ஜோசப் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.களப்பணியாளர்கள், ஆஷா ஊழியர்கள், செவிலியர் கல்லுாரி மாணவிகள் வீடுகளில் டெங்கு களப்பணி மேற்கொண்டனர். பின் டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், டெங்கு நோயின் அறிகுறிகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.