உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருக்கனுார் : வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் இயற்கை கழகம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். ஆசிரியை செந்தமிழ் செல்வி வரவேற்றார். ஆசிரியர் பாலகுமார், ஆசிரியை பார்வதி ஆகியோர் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர். இதில், புவி வெப்பமயமாதலும், அதனால் ஏற்படும் விளைவுகளும், குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.தொடர்ந்து, மகளிர் தினத்தை முன்னிட்டு பெற்றோர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை ஆசிரியை குமுதா, ஜார்ஜஸ், பூவிழி, சங்கரி, ஓம் சாந்தி ஆகியோர் செய்திருந்தனர் உடற்கல்வி ஆசிரியர் வேலவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி