இளம் வழக்கறிஞர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்
புதுச்சேரி: புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சமரச தீர்ப்பாயங்கள் சார்பில் இளம் வழக்கறிஞர்கள் சமரச தீர்வு காண்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கை புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில் நீதிபதிகள் சுமதி, சிவக்குமார், ஜெயசுதா, கிறிஸ்டியன் முன்னிலை வகித்தனர். மூத்த வக்கீல் விருந்தாமோகன் சமரச வழக்குகளை கையாள்வது, எவ்வாறு தீர்வு காண்பது குறித்து எடுத்துரைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட இளம் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். மாஜிஸ்திரேட்டு ரமேஷ் நன்றி கூறினார்.