விழிப்புணர்வு இசைப்பயணம்
புதுச்சேரி, : புதுச்சேரி கலைமாமணி விருதாளர் சங்கம் சார்பில் வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு, மதுபோதை ஒழிப்பு விழிப்புணர்வு சமுதாய, சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு இசைப்பயணம், நகர பகுதி மற்றும் கிராம பகுதியில் தொடர்ந்த 10 மணி நேரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.சங்க நிறுவனர் தமிழ்வாணன், தலைவர் அரியபுத்திரி, பொதுச்செயலாளர் ஜோதிகண்ணன், பொருளாளர் சுவாமிதாசன் ஆகியோர் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினர். அப்போது, சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. காந்தி ஜெயந்தி அன்று நடக்கும் இசைப்பயண நிகழ்ச்சியை துவக்கி வைக்க அழைப்பு விடுத்தனர்.