உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாவேந்தர் கலை இலக்கிய திங்கள் விழா

பாவேந்தர் கலை இலக்கிய திங்கள் விழா

புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், 'விடுதலைப் போரில் புரட்சிக்கவிஞர்'என்ற தலைப்பில் பாவேந்தர் கலை இலக்கிய திங்கள் விழா நடந்தது. பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்கட்சியாகத்தில் நடந்த விழாவிற்கு அறக்கட்டளைத் தலைவர் பாரதி தலைமை தாங்கினார். பாவலர் ராஜேஷ் வரவேற்றார். அறக்கட்டளை செயலர் வள்ளி, புதுவை தமிழ்சங்க பொருளாளர் அருள் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் வாழ்த்துரை வழங்கினார். புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பாவலர் சீனு மோகன்தாசு 'விடுதலைப் பயிர் வளர்ப்போம்' என்ற தலைப்பில் பேசினார். 'விடுதலைப் போரில் புரட்சிக்கவிஞர்'என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. 10 திருக்குறள் ஒப்புவித்த 25 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கவியரங்கத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 35 கவிஞர்கள் பங்கேற்றனர். விழாவில், கலைமாமணிகள் நமச்சிவாயம், மதுரை கலியபெருமாள், பேராசிரியர் விசாலாட்சி, லட்சுமிதேவி, வேல்விழி, சிவக்கொழுந்து, சுவரிதேவி, தமிழரசன், சஞ்சனா, நித்யஸ்ரீ உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை படைப்பாளி ரமேஷ் பைரவி, பாவலர் மதன் ஆகியோர் செய்திருந்தனர். கலைமாமணி மாணிக்கம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ