புதுச்சேரி: ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியின் சார்பில், 15ம் ஆண்டு பரதநாட்டிய அரங்கேற்ற விழா, ஜிப்மர் கலையரங்கத்தில் நடந்தது.ஆதித்யா பள்ளியின் நிறுவனர் விஜயலட்சுமி நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் ஹன்சிகா, கலாஸ்ரீ, 8ம் வகுப்பு படிக்கும் இலக்கியா, ஹன்சிகா, தேவவிகாசினி, ஷர்மி, கமலினி, லிஷிதா, 7ம் வகுப்பு படிக்கும் ஹிரண்மயி ஆகிய 9 மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றமும், 9ம் வகுப்பு மாணவிகள் அன்பரசி, கனிஷ்கா, 8ம் வகுப்பு மாணவிகள் பவிஷா, வைஷ்ணவி, ஏழாம் வகுப்பு மாணவிகள் கீர்த்தனா, ஷாரிகாஸ்ரீ, வசுந்தரா, ஐந்தாம் வகுப்பு மாணவிகள் ஸ்ரீநிதி, லியா ஆகிய 9 மாணவிகளின் சலங்கை பூஜையும் நடந்தது.சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பரதநாட்டிய மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், வித்யநாராயணா அறக்கட்டளை நிறுவனர் அனுதாபூனமல்லி, ஆர்த்தி அனந்தன், சென்னை நுண்கலை நிறுவனர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆதித்யா பள்ளி கலைத்துறை சார்பில் இதுவரை 15 ஆண்டுகளில் 199 மாணவியர் சலங்கை பூஜை, 164 மாணவியர் அரங்கேற்றம் என மொத்தம் 363 பேர் நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்துள்ளனர். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் கலைப்பிரிவு 173 மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.