உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பராமரிப்பு இல்லாத பாரதியார் மணி மண்டபம்

பராமரிப்பு இல்லாத பாரதியார் மணி மண்டபம்

அரியாங்குப்பம் : பாரதியார் மணி மண்டபத்தில் எந்த அடிப்படை வசதியில்லாமல் குப்பைகளுடன் பராமரிப்ப இல்லாமல் உள்ளது. அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூட வளாகத்தில் பாரதியார் மணிமண்டபம் உள்ளது. பாரதியார் பிறந்த நாள், நினைவு நாளில் மட்டும் மணி மண்டபத்தை கடமைக்கு சுத்தம் செய்யப்பட்டு அன்று மட்டும் ஜொலிக்கிறது. மற்ற நாட்களில் சுத்தம் செய்யாமல் குப்பைகளுடன் இருக்கிறது. பாரதியார் பல்கலைக்கூட பயிலும் மாணவர்கள் நடனம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மணி மண்டபத்தை பார்க்க வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கிறது. மணி மண்டபத்தில் உள்ள பாரதியாரின் சிலை பராமரிப்பு இல்லாமல், பொலிவிழந்து காணப்படுகிறது. மணி மண்டபத்தை சுற்றி செடிகள் முளைத்து காடுகளாக உள்ளது.கலைப்பண்பாட்டு துறை அதிகாரிகள் இந்த மணி மண்டபத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை