பாரதியார் நினைவுநாள் கவியரங்கம்
திருக்கனுார், : வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் மகாகவி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு கவியரங்கம் நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். தமிழ் பற்றாளர் சித்தர் ஆளவந்தான் கவியரங்கத்தை துவக்கி வைத்து பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கவியரங்கத்தில் 'வாழ்கிறான் பாரதி' என்ற தலைப்பில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று கவிதைகள் வாசித்தனர். ஆசிரியை பூவிழி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பார்வதி, செந்தமிழ் செல்வி, குமுதா, சங்கரி, சசிகலா, வேலவன், மலர்க்கொடி, குப்புசாமி, சுஜாதா, மகேஸ்வரி, சுமதி, நிஷாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.