உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

புதுச்சேரி : தனியார் வங்கி மேலாளர் பைக்கை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.உறுவையாறு ராமச்சந்திரா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 35; தனியார் வங்கி மேலாளர். இவர் கடந்த 10ம் தேதி இரவு 9:45 மணியளவில் தனக்கு சொந்தமான பைக்கை வீட்டின் எதிரில் நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். மறுநாள் காலை பார்த்தபேது பைக் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை