உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக்குகள் மோதல்; வாலிபர் பலி

பைக்குகள் மோதல்; வாலிபர் பலி

வில்லியனுார் : வில்லியனுாரில் நள்ளிரவில் பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். வில்லியனுார், காவேரி நகர் நாகராஜ் மகன் விநாயகமூர்த்தி, 22; தனியார் வங்கியில் வேலை செய்து தற்போது நின்றுவிட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில் வீட்டில் இருந்து தனது கேடிஎம் பைக்கில் கோட்டைமேடு பக்கம் சென்று கொண்டிருந்தார்.எதிரே வில்லியனுார் அம்மா கோவில் சத்திரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் சுபாஷ், 24, ஸ்பிளன்டர் பிளஸ் பைக்கில் கண்ணகி பள்ளி பைபாஸ் நோக்கி வேகமாக வந்தார். கோட்டைமேடு இந்தியன் பார் எதிரே இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் விநாயகமூர்த்தி இறந்தார். சுபாஷ் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை