உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்

அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கவுரவ தலைவர் பாலமோகனனின் நினைவு நாளை முன்னிட்டு, சம்மேளனம் மற்றும் சுகாதார ஊழியர் சம்மேளனத்தின் சார்பில், இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி மையத்தில் ரத்த தான முகாம் நடந்தது.ரத்த தான முகாமிற்கு, சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் பிரேமதாசன், சுகாதார சம்மேளன கவுரவ தலைவர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சம்மேளனத்தின் இணைப்பு சங்க நிர்வாகிகள் ரத்த தான முகாமில் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில் சம்மேளன பொருளாளர் கிறிஸ்டோபர், துணைத் தலைவர் வானவரம்பன், துணை பொதுச்செயலாளர் இளங்கோவன், சுகாதார சம்மேளன தலைவர் முனுசாமி, பொதுச்செயலாளர் ஜவஹர், பொருளாளர் மணிவாணன், அமைப்பு செயலாளர்கள் ஹரிதாஸ், சுந்தரமூர்த்தி, சுதா, துணை பொதுச்செயலாளர்கள் ஜெகநாதன், சுனீலாகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ