உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொபட் மோதி சிறுவன் காயம்

மொபட் மோதி சிறுவன் காயம்

பாகூர்: அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார் மகன் வர்ஷன், 9; அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார். இவர் கடந்த 21ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள வடக்கு தேரடி சாலையில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக சென்ற மொபட் வர்ஷன் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த சிறுவன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து சந்திரகுமார், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஏட்டு செல்வவிநாயகம், அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வீராம்பட்டினம் சிவாஜி நகர் பாரதிதாசன் என்பவர் மீது வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !