உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எஸ்.கே.வி.,  பில்டர்ஸ் புரோமட்டர்ஸ் 2வது கிளை திறப்பு விழா

எஸ்.கே.வி.,  பில்டர்ஸ் புரோமட்டர்ஸ் 2வது கிளை திறப்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் வீதியில் புதிதாக அமைந்துள்ள எஸ்.கே.வி. பில்டர்ஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தை முன்னாள் சபாநாயகர் செல்வம் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். கட்டுமானத் துறையில் நம்பிக்கையையும் தரத்தையும் முன்னிறுத்தி செயல்பட்டு வரும் எஸ்.கே.வி., பில்டர்ஸ் மற்றும் புரோமட்டர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது கிளை புதுச்சேரி காமட்சியம்மன் கோவில் வீதியில் அமைக்கப்பட்டு  திறப்பு விழா நேற்று நடந்தது.வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில், நவீன கட்டுமான தொழில்நுட்பங்கள், புதிய கட்டுமான முறைகள் மற்றும் தரமான கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, கட்டுமானத் துறையில் புதிய முன்னேற்றத்தை உருவாக்கும் வகையில் இந்த புதிய கிளை அமைக்கப்பட்டுள்ளது. விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் , ஜான் குமார் எம்.எல்.ஏ .,  முன்னாள் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு  நிறுவனத்தின் புதிய கிளையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினர்களை எஸ்.கே.வி., பில்டர்ஸ் மற்றும் புரமோட்டர்ஸ் நிறுவன குடும்பத்தினர்கள் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். தரம், நம்பிக்கை, நவீன தொழில்நுட்பம், வாடிக்கையாளர் திருப்தி, என்ற கொள்கையுடன் செயல்பட்டு வரும் எஸ்.கே.வி., பில்டர்ஸ் மற்றும் புரோமட்டர்ஸ் தனது இரண்டாவது கிளையின் மூலம் மேலும் பல வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான கட்டுமான சேவைகளை வழங்குவதுடன், கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவதற்கான தனது பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ