உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல் 4 பெண் போலீஸ் உட்பட 18 பேர் காயம்

பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல் 4 பெண் போலீஸ் உட்பட 18 பேர் காயம்

வடலுார், : வடலுாரில் நேற்று காலை தனியார் பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பெண் போலீசார் உட்பட 18 பேர் காயமடைந்தனர் .கடலுாரில் இருந்து நேற்று காலை 6:00 மணிக்கு தனியார் பஸ் 30 பயணிகளுடன் விருத்தாசலத்திற்கு புறப்பட்டது. பஸ்சை, விஜயமா நகரத்தை சேர்ந்த டிரைவர் சரவணகுமார்,25; ஓட்டினார். பஸ் காலை 7:10 மணிக்கு வடலுார் சத்திய ஞான சபை அருகே பஸ் வந்தபோது, எதிரே பெண்ணாடத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. அதில், பஸ் மற்றும் லாரியின் முன்பக்கம் முற்றிலும் சேதமடைந்தது.இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் ராமராஜன்,30; பஸ்சில் பயணம் செய்த பெண் போலீசார் ராகவி,28; சகிராபானு,27; மகாலட்சுமி, கவிப்பிரியா மற்றும் சக பயணிகள் மேட்டுக்குப்பம் பாஸ்கர், சேத்தியாத்தோப்பு அகிலா,35; வேலுார் குருப்பிரியா,18; உட்பட 18 பேர் காயமடைந்தனர்.காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி மற்றும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.விபத்து குறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்