மேலும் செய்திகள்
சாகை வார்த்தல் நிகழ்ச்சி
17-Jul-2026
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பபை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அதிகாரிகள் முகந்தி, சிவசங்கரி, அய்யம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பளராக அமைச்சர் ராஜவேலு கலந்து கொண்டு புற்றுநோய் சிறப்பு முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் கிராமப்புற செவிலியர்கள் லலிதா, நதியா, மைதிலி , ஆஷா ஊழியர்கள் தமிழரசி, சத்யா, புவனேஸ்வரி, லதா, வள்ளியம்மை, பாரதி, ஆனந்தநாயகி ஆகியோர் கலந்து கொண்டு 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தி தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
17-Jul-2026