மேலும் செய்திகள்
பேனர் விழுந்து போலீஸ் கான்ஸ்டபிள் காயம்
23-Jan-2025
நெட்டப்பாக்கம்: முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கல்மண்டபம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் லட்சுமி தேவி, 40. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் உள்ளது. சில நாட்களுக்கு முன், லட்சுமி தேவி குப்பை கொட்ட சென்றார்.அப்போது ஆதிமூலம், அவரது மனைவி மல்லிகா ஆகியோர், லட்சுமிதேவியை, ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படு காயமடைந்த லட்சுமிதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின் பேரில், ஆதிமூலம், மல்லிகா மீது நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Jan-2025