உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஸ் டிரைவர் மீது தாக்கு இருவர் மீது வழக்கு

பஸ் டிரைவர் மீது தாக்கு இருவர் மீது வழக்கு

புதுச்சேரி: மூலகுளத்தில் பஸ் டிரைவரை தாக்கி இருவரை போலீசார் தேடிவருகின்றனர். விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கலியநாதன் மகன் தேவகிரி,36; தனியார் பஸ் டிரைவர். இவர் கடந்த 25ம் தேதி மதியம் 2.40 மணியளவில் புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து விழுப்புத்திற்கு தனியார் பஸ்சை ஓட்டி சென்றார். மூலகுளம் சந்திப்பு அருகே வந்த போது, ஸ்கூட்டரில் வந்த இரண்டு பேர் பஸ்சை வழி மறித்து, தேவகிரியை தாக்கினர். காயமடைந்த அவர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தேவகிரி புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை