உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊராட்சி தலைவர் உட்பட இருவர் மீது வழக்குப் பதிவு

ஊராட்சி தலைவர் உட்பட இருவர் மீது வழக்குப் பதிவு

உளுந்துார்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே ஊராட்சி மன்ற தலைவர், அவரது மகன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். உளுந்தூர்பேட்டை தாலுகா பு.கொணலவாடி பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை மனைவி ஜெயக்கொடி. 50; தி.மு.க.., ஊராட்சி மன்றத் தலைவரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரான கொளஞ்சியின் கணவர் சக்திவேலுக்கும், 47; இடையே குடிநீருக்கான போர்வெல் போடுவதில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது.இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்கொடி கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சக்திவேல், குமார், கார்த்திக் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து சக்திவேலை கைது செய்தனர். அதே நேரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்கொடி மீது நடவடிக்கை எடுக்க கோரி கார்த்திக்கின் தாய் லட்சுமி உளுந்துார்பேட்டை போலீசில் புகார் அளித்து இருந்தார்.அதன் பேரில் நடவடிக்கை எடுக்காததால் கார்த்திக்கின் தாய் லட்சுமி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10.30 மணியளவில் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் திரண்டு முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்கொடி, அவரது மகன் ஜெயக்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி