மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
3 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரியில் வளர்ச்சி எற்பட பிற மாநில அரசுகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி கேட்டுக் கொண்டார். புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பாராட்டு விழா தனியார் ஓட்டலில் நடந்தது. விழாவில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:புதுச்சேரி மிகச்சிறிய மாநிலம். இங்கு முன்பு இருந்ததை விட, தற்போது லாரிகளின் எண்ணிக்கை, 7 மடங்கு உயர்ந்திருக்கிறது. அதற்கேற்றார் போல், சாலை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது அரசின் எண்ணம். சாலை ஆக்ரமிப்பு அதிகரித்திருப்பதால், விபத்து ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளதாக, சிலர் கூறினர். அதை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை. எங்கெல்லாம் சாலையை விரிவு படுத்த முடியுமோ, அங்கெல்லாம் அதை விரிவு படுத்தும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் என்ன கோரிக்கை வைத்தாலும், அதை நம்முடைய அரசு ஏற்று செய்து கொடுக்கும். புதுச்சேரி வளர்ச்சியில் யார் யாருக்கு எல்லாம் பங்கு இருக்கிறதோ, அவர்களுடைய கோரிக்கையை அரசு செய்து கொடுத்து வருகிறது. புதுச்சேரியில் இருந்து லாரிகள் பிற மாநிலங்களுக்கு செல்லும் போது, அந்தந்த மாநிலத்தை சேர்ந்த அரசும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. ஏனென்றால், மற்ற மாநிலங்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் தான், புதுச்சேரியில் வளர்ச்சி இருக்க முடியும். அதனால் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதற்கு, பிற மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள், அமைச்சர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago