உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்

முதல்வர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்

வில்லியனுார்: முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வில்லியனுார் தொகுதியில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர். முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் விழானை முன்னிட்டு வில்லியனுார் தொகுதி, பாண்டியன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., கிராம மக்களுடன் முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு புடவைகள், அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மணிகண்டன், சிலம்பரசன், அங்காளன், குமரன், ஆனந்த், பச்சையப்பன் மற்றும் பாண்டியன்நகர், ஓம்சக்தி நகர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். மேலும் வில்லியனுார் பைபாஸ், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகில், கொம்பாக்கம், ஒதியம்பட்டு கோட்டைமேடு நான்குரோடு சந்திப்பு பகுதி, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., அன்னதானம்,  இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி, முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை