உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூரில் சாராயக்கடைக்கு எதிர்ப்பு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

பாகூரில் சாராயக்கடைக்கு எதிர்ப்பு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

பாகூர்: பாகூரில் புதிய இடத்தில் சாராயக்கடை அமைக்கும் அரசின் முயற்சியை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாகூர் ஏரிக்கரை வீதியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்கு சொந்தமான இடத்தில் சாராயக்கடை இயங்கி வந்தது. இந்த கடையின் விற்பனை உரிம கால முடிவடைந்த நிலையில், மீண்டும் ஏலம் எடுத்த நபர், அந்த இடத்தில் சாராயக் கடையை திறக்க முயன்றார். அதற்கு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அங்கு சாராயக்கடைக்கு பதிலாக அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், பாகூர் ஏரியின் கரை பகுதியில் தற்காலிகமாக இயங்கி வரும் சாராயக்கடையை, அங்குள்ள ஒரு தனிநபருக்கு சொந்தமான இடத்தில் மாற்றி அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியை, பாகூர் பேட் பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர்.இந்நிலையில், நேற்று காலை 10.00 மணியளவில், பாகூர் பேட் பகுதி மக்கள் மற்றும் காங்., கம்யூ., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், சாராயக்கடை அமைக்கும் அரசின் முயற்சியை கண்டித்து, பாகூர் ஏரிக்கரை அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உங்களின் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளின் கவணத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து, பொது மக்கள் போராட்டத்தை கைவிட்ட கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் பாகூர் - வில்லியனுார் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ