கமாண்டோ படையினர் அணிவகுப்பு
புதுச்சேரி : புதுச்சேரி ரெயின்போ நகரில் கடந்த சில தினங்கள் முன்பு ரவுடி ரஷி உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து புதுச்சேரி முழுதும் ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி புதுச்சேரி போலீசார் இரவு, பகலாக தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசாருடன், கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் நேற்று இரண்டாவது நாளாக அணிவகுப்பு சென்றனர். அவர்கள் அஜந்தா சிக்னலில் இருந்து புறப்பட்டு காந்தி வீதி, கடற்கரை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு நடத்தினர்.