உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மரில் முதுநிலை டாக்டர் பதவிக்கு வரும் 7ம் தேதி போட்டித்தேர்வு

ஜிப்மரில் முதுநிலை டாக்டர் பதவிக்கு வரும் 7ம் தேதி போட்டித்தேர்வு

புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவமனையில், 102 முதுநிலை உள்ளிருப்பு டாக்டர் பதவிக்கு, வரும் 7ம் தேதி போட்டித் தேர்வு நடக்கிறது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள, ஜிப்மர் மருத்துவமனையில் அனஸ்தீசியாலஜி, உடற்கூறியல், உயிர் வேதியியல், பல் மருத்துவம், தோல் மருத்துவம், இ.என்.டி., பொதுமருத்துவம், பொது அறுவை சிகிச்சை, தடயவியல் மருத்துவம், முதியோர் மருத்துவம், மகப்பேறு, மருந்தியல், கண் மருத்துவம், மனநோய், நுண்ணுயிரியியல், கதிர் வீச்சு புற்றுநோயியல், ரேடியோ புற்றுநோயியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மொத்தம், 102 முதுநிலை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இந்த பதவிக்கு கடந்த ஜூன் 4ம் தேதி முதல் 24ம் தேதி வரை, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான ஆன்லைன் போட்டி தேர்வு வரும் 7ம் தேதி காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை நடக்கிறது. இத்தேர்வில், பங்கேற்பதற்கான ஹால் டிக்கெட், நாளை 2ம் தேதி முதல், www.jipmer.edu.in, என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வு சென்னை, டில்லி, கொல்கத்தா, மும்பை, புதுச்சேரி ஆகிய 5 நகரங்களில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை