புகார் பெட்டி/
மின் கம்பம் உடைந்து சேதம் பெத்து செட்டிப்பேட்டை பொன்னியம்மன் கோவில் தெருவில், மின்கம்பம் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.தமிழ்ச்செல்வன், பெத்து செட்டிப்பேட்டை மாடுகளால் இடையூறு காமராஜர் நகர் தொகுதி பிருந்தாவனம் 9வது குறுக்கு தெருவில், மாடுகள் சாலையில் நிற்பதால், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.ராஜமாணிக்கம். பிருந்தாவனம்.ஹைமாஸ் விளக்கு எரியவில்லைஅபிேஷப்பாக்கம் முழுவதும் ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.சந்துரு, அபிேஷகப்பாக்கம்.சுகாதார சீர்கேடு தவளக்குப்பம் சந்திப்பில், குப்பைகள் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.கணேஷ், தவளக்குப்பம்.நிழற்குடை தேவைமுருங்கப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.ராணி, முருங்கப்பாக்கம்.