மேலும் செய்திகள்
புகார் பெட்டி: குண்டும் குழியுமான சாலை
14-Apr-2026
கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு பத்துக்கண்ணு – தொண்டமாநத்தம் மெயின் ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ராஜ்குமார், தொண்டமாநத்தம். குண்டும் குழியுமான சாலை மேட்டுப்பாளையம் – மூலக்குளம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கர்ணன், புதுச்சேரி. குடிமகன்களால் மக்கள் அச்சம் புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் மது குடிப்பதால் வெளியூர் செல்லும் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். பாரதி, புதுச்சேரி. போக்குவரத்து இடையூறு அரியாங்குப்பம் – வீராம்பட்டினம் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மாரியப்பன், அரியாங்குப்பம். சாலையில் திரியும் மாடுகள் அரும்பார்த்தபுரம் பைஸ் பாசில் மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. பார்த்திபன், வில்லியனுார்.
14-Apr-2026