உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

 தெரு விளக்கு எரியவில்லை: புதுச்சேரி சாரம் பாலாஜி நகர் மெயின் ரோட்டில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.  பாலாஜி, சாரம்.  ––––––––––––––––––––––––––––––––––––– பைபாஸ் சாலையில் மண் குவியல்: அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில் மண் குவியல் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.  சுரேஷ், அரும்பார்த்தபுரம். ––––––––––––––––––––––––––––––––––––––––––– தெரு நாய்கள் தொல்லை: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் வீதியில் தெரு  நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். காந்தி, முதலியார்பேட்டை.  ––––––––––––––––––––––––––––––––––––– நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை: அண்ணாசாலை –  வள்ளலார் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் போக்குவரத்து போலீசாரை நிறுத்தி சீரமைக்க வேண்டும்.  கல்யாணம், ராஜ்பவன். ––––––––––––––––––––––––––––––––––––– மெகா பள்ளம்: நோணாங்குப்பம் சுண்ணாம்மாறு பாலம் முடியும் பகுதியில்  மெகா பள்ளம் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  பாரதி, புதுச்சேரி.  –––––––––––––––––––––––––––––––––––––– சாலையில் மீன் கடைகள்: உப்பளம் சாலையோரத்தில் மீன் கடைகள் வைத்து விற்பனை செய்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.  சரவணன், உப்பளம்.  –––––––––––––––––––––––––––––––––––– குண்டும்: மூலக்குளம்– மேட்டுப்பாளையம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.  ராகவன், மூலக்குளம்.   :


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை