உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்

சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்

புதுச்சேரி : புதுப்பாளையத்தில், சிமென்ட் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணியை, நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம், அய்யனார் கோவில் வீதியில் பழுதடைந்த பழைய சாலையை மாற்றி பேட்கோ நிதி ரூ. 62 லட்சத்தில், புதிய சிமென்ட் சாலை மற்றும் இருபுற கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.இப்பணியை நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேட்கொ செயற்பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் முகுந்தன், புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம் மற்றும் மனித நேய மக்கள் சேவை அமைப்பினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை