உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

திருக்கனுார்: திருமங்கலத்தில் நடந்த மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.திருக்கனுார் அடுத்த திருமங்கலம் ஜெ.வி.ஆர். பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் 5ம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியில் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளைச் சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டன. பல்வேறு சுற்றுகள் முடிவில், ராம்பாக்கம் அணியும், திருமங்கலம் அணியும் இறுதி போட்டியில் மோதின.இதில், ராம்பாக்கம் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது. இரண்டாம் பரிசை திருமங்கலம் ஜெ.வி.எஸ். பிரண்ட்ஸ் அணி பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை ஜெ.வி.ஆர். பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ