உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இளம்பெண்ணிற்கு கொலை மிரட்டல்

இளம்பெண்ணிற்கு கொலை மிரட்டல்

புதுச்சேரி, : இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த உறவினர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.புதுச்சேரி, உழவர்கரை பகுதியை சேர்ந்தவர் லுார்து மேரி ரோஸ், 22. இவர், கடந்த, 2020ம் ஆண்டு ரொமார்க் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். லுார்து மேரி ரோஸ் மைனராக இருக்கும் போது, ரொமார்க்கை, திருமணம் செய்து கொண்டார். அதனால், ரொமார்க் மீது போக்சோ வழக்குப் பதிந்து, கைது செய்து, சிறையில், அடைக்கப்பட்டார்.லுார்து மேரி திருமணத்திற்கு அவரது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பெற்றோரின் சொத்துக்கள் அவருக்கு கிடைக்காமல் இருக்க, உறவினர்கள் சிலர் திட்டமிட்டனர்.இந்த விவகாரத்தில், லுார்து மேரியின் தந்தையின் சகோதரி மரியா, உடந்தையாக இருந்தார். மரியாவிற்கு அவரின் மகன் விமல்ராஜ், மருமகள் ஷகிலா ஆகியோர் உதவினர்.இவர்கள் மூவரும் லுார்து மேரி, அவரது அத்தை வீட்டில் இருந்த போது, அங்கு சென்றனர். அவரை வீட்டை விட்டு, வெளியே செல்லுமாறு தகாத வார்த்தைகளால் திட்டினர். விமல்ராஜ் லுார்து மேரியை, தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். புகாரின்பேரில் விமல்ராஜ் உட்பட மூவர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்