உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.  பள்ளியின் துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். கரிக்கலாம்பாக்கம், சமுதாய நலவழி மைய தலைமை மருத்துவ அதிகாரி ஜான்சன் ரெட்டி, டெங்கு பரவும் முறைகள், டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து, டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அதில், நலவழி மைய சுகாதார ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று, கரிக்கலாம்பாக்கத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொது மக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை  ஆசிரியர்கள் தர்மாம்பாள், மனோஜ் குமார், ஜார்ஜ் மற்றும் பிரபாகரன் செய்திருந்தனர். முன்னதாக, டெங்கு நோய்க்கு எதிராக ஆசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை