மேலும் செய்திகள்
பல்கலையில் இசை நிகழ்ச்சி
16-Jul-2026
புதுச்சேரி: இந்தியா பாரம்பரிய துருபத் இசை நிகழ்ச்சி குருசுகுப்பத்தில் ஆரோதன் கலைக்கூடத்தில் நேற்று மாலை நடந்தது. இசை கலைஞர் ஆயுஷ் திவேதி குரலிசை மூலம் பார்வையாளர்களை மெய்மறக்க செய்தார். மனோஜ் பக்கவாத்தியம் மூலம் மரபின் தாளத்தை வெளிப்படுத்தினார். புதுச்சேரி பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை கேட்டு ரசித்தனர். துருபத், இந்துஸ்தானிய இசையின் மிகவும் பராம்பரிய மரபாகும். வட இந்திய பாரம்பரியத்தின் இசை அடித்தளமாகவும் இருந்து வருகிறது. சக்தி வாய்ந்த ஒலி அதிர்வுகள் மூலம் கேட்பவரை ஆழ்மான ஆன்மிக சக்திக்கு அழைத்து செல்ல தனித்துவம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியை, ஒருங்கிணைப்பாளர் லித் பர்மா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
16-Jul-2026