உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

வில்லியனுார்: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) பண்ணைத் தகவல் ஆலோசனை மையம் சார்பில், விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி, வில்லியனுார் திருக்காஞ்சியில் நடந்தது.    இதில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சி மேலாண்மை உத்திகள் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், வில்லியனுார் உழவர் உதவியக வேளாண் அலுவலர் தினேஷ் குமார் வரவேற்றார். வில்லியனுார் கோட்ட துணை வேளாண் இயக்குனர் ராஜகுமார் நோக்கவுரை ஆற்றினார். ஆத்மா திட்ட இயக்குனர் செழியன் பாபு வாழ்த்துரை வழங்கினார். வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் ஜெயசங்கர் தலைமையுரை ஆற்றினார். நிகழ்ச்சியில், ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி முதல்வர் சங்கர் மண் வள மேம்பாடு மற்றும் உர மேலாண்மைக்கான உத்திகள் குறித்து விளக்கம் அளித்தார். புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ரவி இயற்கை வேளாண்மை சாகுபடியில் உழவியல் தொழில்நுட்பங்கள், சிறுதானிய பயிர்கள் சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து பேசினார். தொடர்ந்து கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலைய பூச்சியல் துறை பேராசிரியர் துரைசாமி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் சிக்கன பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் பூச்சிகள் மேலாண்மை பற்றி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வில்லியனுார் உழவர் உதவியக உதவி வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன், ஆத்மா திட்ட மேலாளர்கள், கோட்ட களப்பணியாளர்கள் செய்திருந்தனர். நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். வேளாண் அலுவலர் தினகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !