உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மும்மொழி கொள்கை விவகாரத்தில் சட்டசபையில் தி.மு.க., - பா.ஜ., மோதல்

மும்மொழி கொள்கை விவகாரத்தில் சட்டசபையில் தி.மு.க., - பா.ஜ., மோதல்

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் நேற்று மும்மொழி கொள்கை தொடர்பாக தி.மு.க., மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இடையே நடந்த காரசார விவாதம் வருமாறு:சபையை துணை சபாநாயகர் ராஜவேலு நடத்தியபோது, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது செந்தில்குமார் பேச துவங்கினார். அப்போது அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ் என 6 மொழிகளில் சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்தார். இன்றைய தொழில் நுட்பத்தில் 5 நிமிடத்தில் என்னால் இவ்வளவு மொழிகளில் பேச முடிகிறது, இன்னும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் மேலும் சிறப்பாக பல மொழிகளில் பேச முடியும் என்றார்.ராமலிங்கம், பா.ஜ.,: அதற்குதான் நாங்கள் மும்மொழி கொள்கையை ஆதரிக்கிறோம்.செந்தில்குமார்: தொழில்நுட்பம் வந்துவிட்டதால், பிற மொழிகளை கற்க வேண்டிய அவசியம் இல்லை. இத்தாலி சென்றால் நீங்கள் பேசும் மொழியில் செல்போனில் பேசி அங்குள்ளவர்களிடம் காண்பித்தால் இத்தாலி மொழியில் பேசி தெரிவிக்கும் என்றார்.எதிர்க்கட்சி தலைவர் சிவா: மூன்றாவது மொழியாக இந்தியைத்தான் படிக்க வேண்டுமா? தெலுங்கு, மலையாளம் படிக்கக் கூடாதா?ராமலிங்கம்: எம்.எல்.ஏ., வீட்டு பிள்ளைகள் ஹிந்தி படிக்க வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்கள் ஹிந்தி படிக்கக்கூடாதா ?சம்பத், தி.மு.க.,: ஹிந்தி படிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. திணிப்பைத்தான் எதிர்க்கின்றோம்.அமைச்சர் சாய் சரவணன்: எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவீர்கள்.நாஜிம், தி.மு.க.,: தமிழகத்தில் நூற்றுக் கணக்கான ஹிந்தி சபாக்கள் உள்ளது, அங்கு இந்தியும் கற்றுத் தரப்படுகிறது.சிவசங்கர், சுயேச்சை: உங்கள் (தி.மு.க.,) குடும்பம் ஹிந்தி படிக்கலாம், பிறர் படிக்கக்கூடாதா என்றார்.ராமலிங்கம்: செந்தில்குமாரை, அவரது தந்தை நன்றாக படிக்க வைத்ததால், இரு மொழிகளில் பேசுகிறார். அவரது பிள்ளைகள் 5 மொழிகளை பேசும். எனவே ஓட்டுக்காக பேசாதீர்கள்.சிவா: ஹிந்தி திணிப்பை ஏற்க முடியாது.இவ்வாறாக தி.மு.க., -பா.ஜ., வினரிடையே வாக்குவாதம் நீண்டது. அப்போது, சபைக்கு வந்த சபாநாயகர் செல்வம், செந்தில்குமார் மட்டும் பேச அனுமதித்து, மற்றவர்களை அமரச் செய்து கருத்து மோதலை நிறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை