கொசுமருந்து தெளிக்கும் பணி தி.மு.க., பிரமுகர் துவக்கி வைப்பு
புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் கொசு மருந்து தெளிக்கும் பணியை, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் துவக்கி வைத்தார். புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் கொசுக்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருவதோடு, பல்வேறு நோய்களுக்குள்ளாகி வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு, உருளையன்பேட்டை தொகுதியில் கொசுக்களை ஒழிக்க தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கோபால், தனது சொந்த செலவில் கொசு மருந்து தெளிக்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், பொருளாளர் சசிகுமார், தொண்டரணி தலைவர் மதனா, ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் அன்பழகன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாமரை, கிளை செயலாளர்கள் ஆறுமுகம், இளங்கோ, முத்துச்சாமி, ஐசக், அகிலன் சத்தியா தொகுதி செயற்குழு உறுப்பினர் புவியரசு, பெரோஸ், இளைஞர் அணி ஆனந்த், நாகராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.