உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிநீர் சேவை: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

குடிநீர் சேவை: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

திருபுவனை: சிலுக்காரிபாளையத்தில் ரூ. 9.70 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றின் குடிநீர் சேவையை அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.திருபுவனை தொகுதிக்குட்பட்ட சிலுக்காரிபாளையம் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க, பழைய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில், 9.70 லட்சம் ரூபாய் செலவில் ஏற்கனவே பழுதான, ஆழ்துளைக் கிணற்றுக்கு மாற்றாக புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது.புதிய ஆழ்துளை கிணற்றின் குடிநீர் சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று பொது மக்களுக்கு குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, கிராம குடிநீர்த்திட்ட உதவிப் பொறியாளர் பீனாராணி, இளநிலைப் பொறியாளர் சுதர்சனம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை