உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

திருக்கனுார், - திருக்கனுார் போலீஸ் சார்பில் போதை பொருட்கள் தடுப்பு தொடர்பாக விளையாட்டு வீரர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. திருக்கனுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட வம்புப்பட்டு கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, சப் இன்ஸ்பெக்டர் பிரியா தலைமை தாங்கி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். விளையாட்டு மற்றும் கல்வி தொடர்பாக ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், எந்தவித தயக்கமும் இன்றி போலீசாரை அணுகலாம். இப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது, இளைஞர்கள் யாரேனும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.இதில், பங்கேற்ற விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போதைப் பொருட்கள் தடுப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை