மேலும் செய்திகள்
போதை பொருளுக்கு எதிராக போலீசார் விழிப்புணர்வு
27-Jun-2026
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உலக போதைப் பொருள் தடுப்பு வாரத்தையொட்டி, புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் போதைப் பொருளை தடுப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் கலந்து கொண்டனர். போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப் பொருள்களின் விற்பனையை எவ்வாறு தடுப்பது பற்றி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
27-Jun-2026