உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

 போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், போதைப் பொருள் தடுப்பு  மற்றும் பற்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார்.  தமிழாசிரியர் இரிசப்பன் வரவேற்றார். சமூக அறிவியல் ஆசிரியை திவ்யா நோக்கவுரையாற்றினார். நல்லாசிரியர் வெற்றிவேல் பற்களின் பாதுகாப்பு முறைகள் அன்றும் இன்றும் என்றும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் தேவி, உதவியாளர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டு, மாணவர்களிடையே பல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  ஆசிரியர்கள் கோமளா, சாமுண்டீஸ்வரி, சங்கரதேவி, தேவி, வனிதா, நான்சி, செந்தில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ரேவதி, வருண், குபேரன், சுகந்தி, அமலா, அருளரசி, அகிலாண்டேஸ்வரி ஆகியோர் பாராட்டி பேசினர். நிகழ்ச்சியையொட்டி நடந்த ஓவியம், கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி நன்றி கூறினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !