உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை பொருள் தடுப்பு கூட்டம்

போதை பொருள் தடுப்பு கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி, மாவட்ட நிர்வாகம் சார்பில், போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பது சம்பந்தமான மாதாந்திர ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். சீனியர் எஸ்.பி., கலைவாணன், சப் கலெக்டர், வருவாய் அதிகாரி, கல்வித் துறை, சமூக நலத்துறை, சுகாதார துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைத்து துறைகளும் கடந்த மாதம் எடுத்த நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்து விளக்கினர். போலீஸ் துறை சார்பில் 13 வழக்குகள் பதியப்பட்டு, 1.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு பணிகள் முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். கல்வித் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாவும் தெரிவிக்கப்பட்டது. மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம், மருந்தகங்களில், காலாவதியான, தடை செய்யப்பட்ட, போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என, சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும், கண்காணிப்பு பணிகளை, தீவிரப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !