தவறி விழுந்த முதியவர் பலி
புதுச்சேரி: திருக்கனுார் அடுத்த சோம்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 90; இவர், வீட்டில் பசு மாடுகளை பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் உள்ள பசு மாடுகளுக்கு தண்ணீர் காட்டுவதற்கு, முத்துகிருஷ்ணன், கொட்டகைக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த மாடு ஒன்று அவர் மீது ஏறியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முத்துகிருஷ்ணனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு, மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மகன் முருகன் அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.