உள்ளூர் செய்திகள்

முதியவர் தற்கொலை

புதுச்சேரி : சர்க்கரை நோயால் அவதிப்பட்ட முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ் 71, சர்க்கரை நோயால் அவதிப்பட்ட இவர் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையில் அவரது வலது காலில் கட்டை விரல் அகற்றப்பட்டது. இதனால் தொடர் வலியால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் உள்ள ஜன்னலில் சால்வையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி லோகம்பாள் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி