உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மகளிர் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

அரசு மகளிர் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி; புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், வேலை வாய்ப்பு அமைப்பு சார்பில், இன்டகரா நிறுவனத்தின் வளாக வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் மோகன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். கல்லுாரியின் வேலைவாய்ப்பு அதிகாரி வரலட்சுமி வரவேற்றார். இன்டகரா நிறுவன மனிதவள மேலாளர் தீபன் கலந்துகொண்டு, நிறுவனத்தின் முக்கிய அம்சங்கள், எதிர்கால குறிக்கோள்கள் மற்றும் சம்பள விபரங்கள் குறித்து விளக்கினார்.தொடர்ந்து, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடந்தது.இதில், 300க்கும் மேற்பட்ட, கல்லுாரி இறுதியாண்டு பயிலும் மாணவிகள் கலந்துகொண்டனர்.வேலை வாய்ப்பு அதிகாரி சந்திரா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி