உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நமச்சிவாயத்தை ஆதரித்து மாஜி சேர்மன் ஓட்டு சேகரிப்பு

நமச்சிவாயத்தை ஆதரித்து மாஜி சேர்மன் ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி : பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து நெல்லித்தோப்பு தொகுதி பொறுப்பாளரும் முன்னாள் சேர்மன் சிவகாந்தன் தலைமையில் நேற்று தீவிர ஓட்டு சேகரித்தனர்.புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, நெல்லித்தோப்பு தொகுதி என்.ஆர்.காங்., பொறுப்பாளரும், முன்னாள் சேர்மன் சிவகாந்தன் தலைமையில், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட அண்ணா நகர், டி.ஆர்.நகரில் முதல்வர் ரங்கசாமி திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி, தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டனர்.ஓட்டு சேகரிப்பின் போது, என்.ஆர்.காங்., நிர்வாகி சவுந்தர்ராஜன், முன்னாள் சேர்மன்கள் சுந்தரி, ஆனந்தலட்சுமி, மற்றும் நிர்வாகிகள் பாஸ்கர், வடிவேல், கணபதி, சந்துரு, பிரபு, குவைத் குமார், ஜனார்த்தனன், ரிஷி, தினேஷ், மணிகண்டன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி