விவசாயி தற்கொலை
புதுச்சேரி: நோயால் அவதிப்பட்ட விவசாயி பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சந்திரசேகர்,25; விவசாயி. இவருக்கு சில தினங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து வலியால் அவதிப்பட்டு வந்த சந்திரசேகர் நேற்று மதியம் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.