உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தந்தை மாயம்: மகன் புகார்

தந்தை மாயம்: மகன் புகார்

புதுச்சேரி: சிகிச்சை பெற மருத்துவமனையில் தங்கியிருந்த தந்தையை காணவில்லை என மகன் போலீசில் புகார் செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்துார் அடுத்த ஆராஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், 63; இவர் தனது மகனுடன் கடந்த 24ம் தேதி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வளாகத்தில் தங்கியிருந்தார். மறுநாள் காலையில் பார்க்கும் போது, அவரை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது மகன் அண்ணாமலை கொடுத்து புகாரின் பேரில், டி.நகர்., போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை