உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் ஓட்டிய சிறுவர ்கள் பெற்றோருக்கு அபராதம்

பைக் ஓட்டிய சிறுவர ்கள் பெற்றோருக்கு அபராதம்

காரைக்கால் : காரைக்காலில் அதிவேகமாக பைக்கில் சென்ற இரு சிறுவர்களின் பெற்றோருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.காரைக்கால் மாவட்டத்தில் வாலிபர்கள் சிலர் விலை உயர்ந்த பைக்குகளை அதிகம் வேகத்தில் ஓட்டிச் செல்லுகின்றனர்.இதனால் பல இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.இதை தடுக்கு வகையில் சீனியர் எஸ்.பி.,மனீஷ் அறிவுறுத்தலின் பேரில் சமீபத்தில் காரை காவலன் செயலி மூலம் இரு சக்கர வாகனத்தில் ரேஸ் ஓட்டியதாக வந்த புகாரின் பேரில் டி.என். 49 சி.டபள்யூ 9187 பதிவெண் கொண்ட பஜான் கே.டி.எம்., டியூக் பைக்கை கைப்பற்றி விசாரித்தபோது 18வயது பூர்த்தி அடையாத நபர் ஓட்டியது தெரியவந்தது.சிறுவன் பைக்கை ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக பைக் ஓட்டிய சிறுவனின் தந்தை நிரவி தைக்கால் தெருவை சேர்ந்த ஸ்ரீராம் மீது மோட்டார் வாகன சட்டம் 199 ஏ மற்றும் பொது இடத்தில் ரேஸ் ஓட்டியதற்கு மோட்டார் வாகன சட்டம் 189 ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மேலும் காரைக்கால் வி.ஓ.சி., கிழக்கு புறவழி சாலையில் 18 வயது பூர்த்தியாகாத சிறுவன் ரேஸ் ஓட்டியதற்காக பி.ஒய் 05 கியூ 1301 என்ற பதிவெண் கொண்ட பஜாஜ் கே.டி.எம்., டியூக் பைக் ஓட்டிய சிறுவனின் தந்தை ,நெடுங்காடு பண்டாரவடையை சேர்ந்த திருமாளன் என்பவருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.காரைக்கால் மாவட்டத்தில் சாலையில் பைக்கில் ரேஸ் ஓட்டுவோர் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.மேலும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புகார்களை Karaikavalan என்ற ஆப் மூலமாகவோ அல்லது 9489205307 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகைபடம் அல்லது வீடியோவாக எடுத்து புகார் அனுப்பினால் விசாரணை செய்து மோட்டார் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துபோலீசார் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை