/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லுாரிகளுக்கு இடையிலான பேட்மின்டன் சமுதாய கல்லுாரிக்கு முதல் பரிசு
கல்லுாரிகளுக்கு இடையிலான பேட்மின்டன் சமுதாய கல்லுாரிக்கு முதல் பரிசு
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையிலான, பேட்மின்டன் ஆண்கள் பிரிவு போட்டி ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.கல்லுாரி முதல்வர் விமல் ஆனந்த் போட்டியை துவக்கி வைத்தார். போட்டிகளில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரி மாணவர்கள் முதல் பரிசு வென்றனர். சமுதாய கல்லுாரி உதவி பேராசிரியர் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆச்சார்யா கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர்கள் ராஜ், ராஜலட்சுமி செய்திருந்தனர்.