உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீன்பிடி தடைக் காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள்

மீன்பிடி தடைக் காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள்

புதுச்சேரி: மீன்பிடி தடைக்காலம் முடிந்து நேற்று நள்ளிரவு முதல் மீனவர்கள் படகுகள் மூலம் கடலுக்கு சென்றனர்.புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. தமிழகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலும், ஆந்திராவையொட்டி ஏனாம், கேரளாவையொட்டி மாகி அமைந்துள்ளது. கடலில் மீன் வளங்களை பாதுகாத்திட கடந்த ஏப்ரல் 15ம் தேதி மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களுக்கு துவங்கியது.இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. மீனவர்கள் தங்களது வலைகள் மற்றும் படகுகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மீன்பிடி தடைக்காலம் நேற்று 14ம் தேதியுடன் முடிந்த நிலையில், நேற்று நள்ளிரவு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இவர்களுக்கு பெண்கள் சிறப்பு யாகம் நடத்தி வழி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !