உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ. 12.20 கோடி வழங்கல்: முதல்வர் ரங்கசாமி துவக்கிவைப்பு

மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ. 12.20 கோடி வழங்கல்: முதல்வர் ரங்கசாமி துவக்கிவைப்பு

புதுச்சேரி: தடைகால நிவாரணமாக 18,799 மீனவ குடும்பங்களுக்கு 12.20 கோடி வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் மூலம் ஆண்டுதோறும் குடும்பம் ஒன்றிக்கு 6,500 ரூபாய் வீதம் தடைக்கால நிவாரணம் வழங்கிவருகிறது. 2024 மீன்பிடி தடைக்காலத்திற்கு முதற்கட்டமாக 18,799 மீனவ குடும்பங்களுக்கு 12,20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கியது.இந்த மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது.சபாநாயகர் செல்வம்,மீன்வளத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி நிவாரணம் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.புதுச்சேரி பிராந்தியத்தில் 9,725 குடும்பங்களும்,காரைக்கால் பகுதியில் 3682 குடும்பங்களும்,மாகி பகுதியில் 523 குடும்பங்கள்,ஏனாம் பகுதியில் 4849 குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீஜெயக்குமார்,எம்.எல்.ஏக்கள் பாஸ்கர்,லட்சுமிகாந்தன்,மீன்வளத் துறை செயலர் நெடுஞ்செழியன்,இயக்குனர் முகமது இஸ்மாயில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ